ADDED : ஜன 01, 2025 01:29 AM

சென்னை : பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்காக, வரும், 3 மற்றும், 10ம் தேதிகளில், ரேஷன் கடைகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு மாதத்தின் முதலாவது மற்றும் இரண்டாவது வெள்ளிக்கிழமை விடுமுறை. அதற்கு மாற்றாக, அந்த வாரங்களில் வரும் ஞாயிற்றுக்கிழமை வேலை நாள். பொங்கலை முன்னிட்டு, அரிசி கார்டு தாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய பரிசுத் தொகுப்பை அரசு அறிவித்துள்ளது.
இதற்காக, வரும், 3 மற்றும் 10ம் தேதி, ரேஷன் கடைகளுக்கு வேலை நாளாக அறிவித்து, உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதை ஈடுசெய்ய ஜன., 15, பிப்., 22ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாளை மறுதினம் கார்டுதாரர்களின் வீடுகளில், 'டோக்கன்' வழங்க வேண்டும். வரும், 10ம் தேதி கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்ய வேண்டும் என, ரேஷன் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.