உள்ளடக்கத்திற்கு செல்ல
ரேஷன் ஊழியர்கள் போராட்டம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
ரேஷன் ஊழியர்கள் போராட்டம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
ADDED : ஜூன் 28, 2026 12:34 AM
அ நிறம் | அளவு
சென்னை: ரேஷன் கடைகளில், கார்டுதாரர்களின் விரல் ரேகை சரிபார்ப்பு பணியில் உள்ள சிக்கலை சரி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 1ம் தேதி முதல், வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கும், தாயுமானவர் திட்டத்தை புறக்கணிக்கும் போராட்டத்தை, தமிழக ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'வரும், 1ம் தேதி முதல் தாயுமானவர் திட்டத்தை புறக்கணிக்கும் போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டால், அத்தியாவசிய பொருட்கள், தகுதியான பயனாளிகளுக்கு தடையின்றி கிடைக்க, சம்பந்தப்பட்ட கலெக்டர்களை தொடர்பு கொண்டு, உரிய அறிவுரை பெற்று தக்க நடவடிக்கை எடுக்கவும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
