ADDED : ஏப் 22, 2025 04:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ரேஷன் கடைகளுக்கு உணவுப்பொருட்களை பாக்கெட்டில் வழங்குவது, ஊழியர்களுக்கு கல்வித் தகுதி அடிப்படையில் சம்பளம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று முதல், 24ம் தேதி வரை மாநிலம் முழுதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, தமிழக அரசு நியாய விலைக் கடை பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்த நாட்களில், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல், ரேஷன் கடை பணியில் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கவும், வேலை நிறுத்தத்தில் பங்கேற்போருக்கு, சம்பளம் பிடித்தம் செய்யவும் சங்க பதிவாளர் அறிவுறுத்தியுள்ளார்.

