ரேஷன் ஊழியர்கள் செப்., 12ல் காத்திருப்பு போராட்டம்
ரேஷன் ஊழியர்கள் செப்., 12ல் காத்திருப்பு போராட்டம்
ADDED : ஆக 21, 2025 12:57 AM
சென்னை:''பொது வினியோக திட்டத்திற்கு தனி துறையை உருவாக்க வலியுறுத்தி, சென்னையில் செப்., 12ம் தேதி காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும்,'' என, தமிழக ரேஷன் கடை பணியாளர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன், பொதுச் செயலர் தினேஷ்குமார் தெரிவித்தனர்.
அவர்கள் அளித்த பேட்டி:
ரேஷன் பொருட்களை, உணவு துறையின் நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்கிறது. ரேஷன் கடைகளை, கூட்டுறவு துறை நடத்துகிறது. இந்த இரண்டு துறைகளின் அதிகாரிகள் மட்டுமின்றி, பல்வேறு துறை அதிகாரிகளும் ரேஷன் கடைகளில் ஆய்வுக்கு வந்து, ஊழியர்களை மிரட்டுகின்றனர்.
எனவே, பொது வினியோக திட்டத்திற்கு, தனி துறையை உருவாக்குமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம்.
இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதுடன், ரேஷன் ஊழியர் களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும்.
இதை வலியுறுத்தி, ரேஷன் கடை ஊழியர்கள், செப்., 12ம் தேதி, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில், காத்திருப்பு போராட்டம் நடத்துவர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.