உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : செப் 18, 2026 02:40 AM

அ நிறம் | அளவு
- நமது நிருபர் -: தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் தினகரன், மாநில செயலர் மாரிமுத்து கூறியதாவது:
கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் ரேஷன் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள், ஆய்வின் போது எடை குறைவாக பொருட்கள் வழங்கினால், தற்காலிக பணிநீக்கம் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என, பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையை திரும்ப பெற வேண்டும்.
மாநில தலைவர் ஜெயச்சந்திர ராஜா அறிவுறுத்தலின்படி, வரும், 25ல் ஒருநாள் வேலை நிறுத்தம் செய்து, மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
