உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஆக 20, 2026 11:15 PM

அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்க மாநில துணைத்தலைவர் தினகரன், மாநில செயலர் மாரிமுத்து கூறியதாவது:
கடந்த, 10 நாட்களாக இணையதள சேவை கிடை க்காததால், ரேஷன் பணியாளர்கள், மக்களுக்கு இடையே வாக்கு வாதம் நடக்கிறது. இது மன அழுத்தத்தை உண்டாக்குகிறது. இந்த மாதத்திற்கான விற்பனை சதவீதம் குறைந்துள்ளது.
இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தும், தீர்வு கிடைக்கவில்லை.
இணைய தள சேவையை மேம்படுத்தக் கோரி, இன்று மாநிலம் தழுவிய வட்ட அளவில், குடிமைபொருள் வட்ட வழங்கல் அலுவலரிடம், பி.ஓ.எஸ்., எனப்படும் விற்பனைக்கான கருவியை ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
