உள்ளடக்கத்திற்கு செல்ல

நடிகர் அஜித்தை முன்னிறுத்தி மீண்டும் ஒரு கட்சி தொடக்கம்
நடிகர் அஜித்தை முன்னிறுத்தி மீண்டும் ஒரு கட்சி தொடக்கம்
ADDED : செப் 24, 2026 07:31 AM

அ நிறம் | அளவு
சென்னை: நடிகர் அஜித் ரசிகர்களால், கள்ளக்குறிச்சியில் 'தமிழக மக்கள் கழகம்' என்ற கட்சி ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலையில், அவரை முன்னிறுத்தி மேலும் ஒரு கட்சி தொடங்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் அருகே நந்தம்பாக்கத்தில் நேற்று முன்தினம், நடிகர் அஜித் ரசிகர்கள் சிலர் ஒருங்கிணைந்து, 'அனைத்து நண்பர்கள் முன்னேற்றக் கழகம்' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கினர். மஞ்சள், ரோஸ் வண்ணங்களின் பின்னணியில், இரண்டு சிங்கங்களுக்கு நடுவே, 'ரேஸ் கார்' கொண்ட கட்சிக்கொடியையும் அறிமுகம் செய்தனர்.
