PUBLISHED ON : அக் 02, 2025 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தங்களின் தேவைகளுக்காக முதன்முதலாக ஒரு நாளிதழ் கவலைப்பட்டு, செய்திகளால் சேவை செய்கிறது என்பதை உணர்ந்த வாசகர்கள், தினமலர் நாளிதழை பெரும் ஆதரவோடு அரவணைத்தனர். அப்படி தினமலர் வளர்ந்தது.
ஒரு பிரச்னை என்றால், 'தினமலர் நாளிதழில் செய்தி வந்தால் அது அரசின் கவனத்திற்கு போகும்; உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்' என்ற நம்பிக்கை இப்போதும் வாசகர்களிடம் இருக்கிறது. ஒரு செய்தி தினமலர் நாளிதழில் வந்தால் மட்டுமே அதை நம்புகின்ற வாசகர்கள் அதிகம்.
இந்த நம்பிக்கையை அடிபிறழாது காப்பாற்றுவதால், தினமலர் நாளுக்கு நாள் வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது.