ADDED : நவ 10, 2024 02:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:மாநில அளவிலான ஓவியம், சிற்பம் கலைக்காட்சி போட்டிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கலை பண்பாட்டுத்துறை வெளியிட்ட அறிக்கை: நுண்கலை பிரிவில் உள்ள கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், மாநில அளவிலான ஓவியம் மற்றும் சிற்பம் கலைக்காட்சி போட்டிகள் நடக்க உள்ளன.
இதில், சிறந்த கலைப் படைப்புகளை வழங்கும், 36 வயதிற்கு மேற்பட்ட 30 கலைஞர்களுக்கு தலா, 20,000 ரூபாய்; 35 வயதுக்கு உட்பட்ட 20 இளம் கலைஞர்களுக்கு தலா 10,000 ரூபாய் என, 50 கலைஞர்களுக்கு, 8 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இதற்கு, https://artandculture.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.