தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி அதிகரிப்பு

ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி அதிகரிப்பு

ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி அதிகரிப்பு


ADDED : ஜன 16, 2025 10:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 16, 2025 10:57 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்:இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், நடப்பு நிதியாண்டின் ஒன்பது மாதங்களில், ரூபாய் மதிப்பில் 13.22 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது.

கடந்த 2023 - 24ம் நிதியாண்டில், ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில், நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் 83,852 கோடி ரூபாயாக இருந்தது. நடப்பு 2024 - 25ம் நிதியாண்டின் இதே எட்டு மாதங்களில், 94,936 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, ரூபாய் மதிப்பில் 13.22 சதவீதம்; டாலர் மதிப்பில் 11.58 சதவீத உயர்வாகும்.

கடந்த நிதியாண்டின் டிசம்பர் மாதத்தில், 10,787 கோடி ரூபாய் அளவுக்கு நடந்த ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், நடப்பு நிதியாண்டின் டிசம்பர் மாதம் 12,427 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, ரூபாய் மதிப்பில் 15.21 சதவீதம்; டாலர் மதிப்பில் 12.89 சதவீதம் அதிகம்.

ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவர் சக்திவேல் கூறுகையில், ''திருப்பூரின் ஒட்டுமொத்த பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், கடந்த நிதியாண்டை விட, நடப்பு நிதியாண்டில் 15 சதவீதம் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

''வர்த்தகத்தில் வளர்ச்சி நிலை தொடர்ந்து நீடித்து வருவதால், திருப்பூரின் நடப்பு நிதியாண்டுக்கான மொத்த ஏற்றுமதி, 40,000 கோடி ரூபாயை தொட்டுவிடும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us