தி.மு.க., ஆட்சியில் ரூ.6,792 கோடி கோவில் நிலங்கள் மீட்பு; கணக்கு சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
தி.மு.க., ஆட்சியில் ரூ.6,792 கோடி கோவில் நிலங்கள் மீட்பு; கணக்கு சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
ADDED : அக் 21, 2024 11:06 AM

சென்னை: ரூ.6,792 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் மூன்று ஆண்டுகளில் மீட்கப்பட்டுள்ளன என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை திருவான்மியூரில் 31 ஜோடிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில், மணமகளுக்கு 4 கிராம் தாலி வழங்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: எல்லா துறைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். மூன்று ஆண்டுகளாக அறநிலையத்துறையில் பல்வேறு சாதனைகள் செய்யப்பட்டுள்ளன . 10,638 கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குடமுழுக்கு
ரூ.6,792 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் மூன்று ஆண்டுகளில் மீட்கப்பட்டுள்ளன. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் முக்கியமான கோவில்களில் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டன. கோவில்களில் அன்னதானம் திட்டம் மூலமாக தினமும் 92 ஆயிரம் பேர் பசியாறுகின்றனர். தி.மு.க., அரசு ஆட்சி பொறுப்பேற்ற பின், 2,226 கோவில்களில் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்படாமல் இருந்த, தங்கம் முதலீடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம்.
கொடியவர்களின் கூடாரம்
பக்தியை பகல்வேஷ அரசியலுக்கு சிலர் பயன்படுத்துகின்றனர். தமிழக அரசின் செயல்பாடுகளை உண்மையான பக்தர்கள் பாராட்டுகின்றனர். அரசின் சாதனைகளை தடுக்கவே வழக்குகளை தொடர்கின்றனர். பராசக்தி திரைப்படத்தில் ஒரு வசனம் இருக்கிறது. கோவில் கூடாது என்பதற்காக அல்ல. கோவில் கொடியவர்களின் கூடாரமாய் ஆகிவிடக்கூடாது. சாதனைகளை தடுப்பதற்காக தான் வழக்குகள் தொடரப்படுகின்றனர். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

