பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்ப்பு; கோவை அரபிக் கல்லூரி முதல்வர் உள்பட 2 பேர் கைது
பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்ப்பு; கோவை அரபிக் கல்லூரி முதல்வர் உள்பட 2 பேர் கைது
ADDED : ஜூன் 18, 2025 09:29 PM

கோவை: ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்த்த கோவை அரபிக் கல்லூரி முதல்வர் உள்பட 2 பேரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர்.
கோவை குனியமுத்தூர் பகுதியில் அரபிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் அரபி மொழி கற்பித்து தருவதாகக் கூறி பயங்கரவாத சித்தாத்தங்கள் ரகசியமாக போதிக்கப்பட்டு வருவதாகவும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக ஏற்கனவே என்.ஐ.ஏ., வழக்குப்பதிவு செய்துள்ளது.
மேலும், கோவையில் கடந்த 2022ம் ஆண்டு நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு கோவை அரபிக் கல்லூரியுடன் தொடர்புடையவர்கள் என்பதும் என்.ஐ.ஏ., விசாரணையில் தெரிய வந்தது.
கோவை அரபிக் கல்லூரியின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து வந்த என்.ஐ.ஏ., அதிகாரிகள், கோவையில் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பிற்கு ஆள்சேர்த்த, அரபிக் கல்லூரி முதல்வர் அகமது அலி, அந்தக் கல்லூரியின் ஊழியர் ஜவஹர் சாதிக் ஆகிய இருவரை இன்று கைது செய்தனர்.