3 மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்'; நிவாரண முகாம்களை தயாராக வைத்திருங்க; முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
3 மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்'; நிவாரண முகாம்களை தயாராக வைத்திருங்க; முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
UPDATED : நவ 26, 2024 03:42 PM
ADDED : நவ 26, 2024 02:38 PM

சென்னை: நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில்,நேற்று தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது அதற்கடுத்து இரு நாட்களில் வடக்கு- வடமேற்கு திசையில் நகரக்கூடும். இது நாளை புயலாக மாற வாய்ப்பு உள்ளது.
இதனால், இன்று
மயிலாடுதுறை
நாகை
திருவாரூர்
காரைக்கால் மாவட்டங்களில் அதிகனமழையும், ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும்
சென்னை
திருவள்ளூர்,
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு,
விழுப்புரம்,
கடலூர்
அரியலூர்
தஞ்சாவூர்
புதுக்கோட்டை
சிவகங்கை
ராமநாதபுரம்
புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்
கள்ளக்குறிச்சி
பெரம்பலூர்
திருச்சி
தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை
கடலூர்
மயிலாடுதுறை
காரைக்காலில் ஓரிரு இடங்களில் அதிகனமழையும், ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும்
சென்னை
திருவள்ளூர்
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு
விழுப்புரம்
அரியலூர்
திருவாரூர்
நாகை
தஞ்சாவூர்
புதுக்கோட்டை
புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்
ராணிப்பேட்டை
திருவண்ணாமலை
கள்ளக்குறிச்சி
பெரம்பலூர்
திருச்சி
சிவகங்கை
ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில்,
சென்னை மற்றம் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி , மின்னலுடன் கூடிய கன மிக கனமழை பெய்யக்கூடும். வெப்பநிலை 25- 26 டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன - மிக கனமழை பெய்யக்கூடும். வெப்பநிலை 25- 26 டிகிரி செல்சியதை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும்.
26, 27 தேதிகளில் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல், தென் மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர, மத்திய மேற்கு வங்கக்கடல், தென்மேற்குவங்கக்கடல் அரபிக்கடல் பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
முதல்வர் ஆலோசனை
கனமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்ட கலெக்டருடன் முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். ஆலோசனையில் தலைமை செயலாளர் முருகானந்தம், பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பங்கேற்றனர்.
கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: வெள்ள நீர் தேங்கி பயிர்கள் சேதமடைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு அழைத்து செல்ல வேண்டும்.
* மின்சார வசதி தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும். இவ்வாறு அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.