நாளை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்; உங்க மாவட்டம் இருக்கா நோட் பண்ணுங்க!
நாளை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்; உங்க மாவட்டம் இருக்கா நோட் பண்ணுங்க!
UPDATED : நவ 28, 2024 02:24 PM
ADDED : நவ 28, 2024 02:23 PM

சென்னை: செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு நாளை(நவ.29) அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: வடமேற்கில் நகர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வடகிழக்கு திசை நோக்கி நகர்கிறது. இன்று (நவ.,28) மாலை அல்லது நாளை காலைக்குள் பெங்கல் புயல் உருவாக வாய்ப்பு உள்ளது.
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய 9 மாவட்டங்களில் இன்று (நவ.,28) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு நாளை (நவ.29) ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சை ஆகிய 5 மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 6 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் டிச.,2ம் தேதி வரை கனமழை நீடிக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.