8 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்; உங்க மாவட்டம் இருக்கா பாருங்க!
8 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்; உங்க மாவட்டம் இருக்கா பாருங்க!
ADDED : நவ 30, 2024 01:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: பெஞ்சல் புயல் காரணமாக, தமிழகத்தில் மாலை 4 மணி வரை 8 மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
பெஞ்சல் புயல் சென்னைக்கு 110 கி.மீ. தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது. தமிழகத்தில் மாலை 4 மணி வரை 8 மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ரெட் அலெர்ட்
* விழுப்புரம்,
* வேலுார்,
* திருவண்ணாமலை,
* காஞ்சிபுரம்,
* ராணிப்பேட்டை,
* திருவள்ளூர்,
* செங்கல்பட்டு,
* சென்னை ஆகிய 8 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
மிதமான மழைக்கு வாய்ப்பு
* கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.