கோவை, நீலகிரிக்கு ரெட் அலெர்ட்; 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்!
கோவை, நீலகிரிக்கு ரெட் அலெர்ட்; 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்!
UPDATED : டிச 03, 2024 02:53 PM
ADDED : டிச 02, 2024 01:20 PM

சென்னை: கோவை, நீலகிரிக்கு இன்று (டிச.,02) அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை, நீலகிரிக்கு இன்று (டிச.,02) அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இதனால் 200 மி,மீட்டருக்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று (டிச.,02) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இதனால், 115.6 மி.மீட்டர் முதல் 201.4 மி.மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், கரூர், மதுரை, விருதுநகர், தென்காசி ஆகிய 10 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், 64.5 மி.மீட்டர் முதல் 115.5 மி.மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.