குமரி மாவட்ட யானைகளுக்கு ஒரு நாள் புத்துணர்ச்சி முகாம்
குமரி மாவட்ட யானைகளுக்கு ஒரு நாள் புத்துணர்ச்சி முகாம்
ADDED : செப் 20, 2011 11:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட யானைகளுக்கு ஒரு நாள் புத்துணர்ச்சி முகாம் நடந்தது.
இதில் 10 யானைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தமிழ்நாடு யானைகள் நல சங்கம், குழித்துறை லயன்ஸ் கிளப் இணைந்து இந்த முகாமை நடத்தின. குழித்துறை வாவுபலி மைதானத்தில் நடந்த முகாமில் தேவசம்போர்டுக்கு சொந்தமான கோபாலன் உள்ளிட்ட 10 யானைகள் கலந்து கொண்டன. இதனை மாவட்ட வன அதிகாரி ரிட்டோ சிரியாக் தொடங்கி வைத்தார். சென்னை கால்நடை பல்கலைகழக பேராசிரியர் ராம்பாபு தலைமையில் டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். மேலும் யானை பாகன்களுக்கு யானையின் உணவு மற்றும் மருந்துகள் பற்றி விளக்கமளிக்கப்பட்டது. விழாவில் பேசிய ரிட்டோ சிரியாக், ''குமரி மாவட்டத்தில் 30 சதவீதம் காடுகள் உள்ளது. 70க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன,'' என தெரிவித்தார்.