ADDED : பிப் 11, 2025 03:24 AM
சென்னை : 'தைப்பூச நாளான இன்று, சார் - பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும்; பத்திரப்பதிவு பணிகள் மேற்கொள்ளப்படும்' என, பதிவுத்துறை அறிவித்துள்ளது.
சுப முகூர்த்த நாட்கள் மற்றும் குறிப்பிட்ட சில விசேஷ நாட்களில் பத்திரப்பதிவு மேற்கொள்ள, பொது மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதை கருத்தில் வைத்து, ஆடிப்பெருக்கு, தமிழ் புத்தாண்டான சித்திரை முதல் நாள், தைப்பூசம் போன்ற நாட்களில், சார் - பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தைப்பூச நாளான இன்று, சார் - பதிவாளர் அலுவலகங்கள், காலை 10:00 மணி முதல் பத்திரப்பதிவு முடியும் வரை திறந்து இருக்கும். இதற்காக சார் - பதிவாளர் அலுவலகங்களை திறக்க, பதிவுத்துறை பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விடுமுறை நாளுக்கான கூடுதல் கட்டணம் செலுத்தி, பொதுமக்கள் பத்திரப்பதிவு செய்யலாம் என பதிவுத்துறை அறிவித்துள்ளது.