உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : அக் 18, 2026 05:29 PM
அ நிறம் | அளவு
எரியோடு: எரியோடு அருகே நிலத்தகராறில் மூதாட்டியை கொன்ற உறவினர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார், சொக்கலிங்கபுரம், தெய்வானை, 60. நேற்று காலை அம்மாபட்டியை சேர்ந்த மருமகன் சேகரின் தோட்டத்திற்குச் சென்றார். அங்கிருந்த சேகரின் அண்ணன் விவசாயியான சந்தனம், 56, என்பவருடன் நிலப்பிரச்னை தொடர்பாக பேசினார்.
இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், சந்தனம், மண்வெட்டியால் தெய்வானையை தாக்கியதில், அவர் உயிரிழந்தார். எரியோடு போலீசார், சந்தனத்தை கைது செய்தனர்.
