தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/சர்வே நிலையங்கள் தொகுப்பு வெளியீடு

சர்வே நிலையங்கள் தொகுப்பு வெளியீடு

சர்வே நிலையங்கள் தொகுப்பு வெளியீடு


UPDATED : நவ 11, 2026 09:42 PM

ADDED : நவ 11, 2026 09:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 11, 2026 09:42 PM ADDED : நவ 11, 2026 09:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழகத்தில், ‘பெரு முக்கோணவியல் நில அளவை நிலையங்கள்’ குறித்த விபரங்கள் ஆவணப்படுத்தப்பட்டு, தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளன.

இது தொடர்பாக, நில அளவைத் துறை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில், 1802ம் ஆண்டு, சென்னை பரங்கிமலையில், நில அளவை நிலையம் தொடங்கப்பட்டது. அதிலிருந்து தொடங்கிய, நில அளவை பணிகள், 1871ல் முடிக்கப்பட்டன. இதில், பெரு முக்கோணவியல் முறையில், நிலங்கள் அளக்கப்பட்டு, எல்லைகள், அளவுகள் வரையறை செய்யப்பட்டன.

இதேபோல், நாடு முழுதும், முக்கோணவியல் முறையில், நிலங்கள் அளக்கப்பட்டன. இதில், நில அளவை புள்ளிகள், பெரு முக்கோணவியல் நில அளவை நிலையங்களாக குறிப்பிடப்படுகின்றன.

நாடு முழுதும் இத்தகைய நிலையங்கள், எந்தெந்த பகுதிகளில் அமைந்துள்ளன என்பது தொகுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் பெரு முக்கோணவியல் நிலையங்கள் குறித்த விபரங்கள் ஆவணப்படுத்தப்பட்டன. அவை, ஐந்து தொகுதிகளாக அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இத்தொகுப்புகள், அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us