ADDED : ஜன 19, 2025 02:44 AM
இந்தியாவில், 1.4 கோடிக்கும் அதிகமான சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் இன்னும் முறைப்படுத்தப்படாமல் பாரம்பரியமாக நடத்தப்படுகின்றன. இந்த வணிகங்களில் கிடைக்கும், வாடிக்கையாளர் அனுபவத்தை வைத்து, அதே வாடிக்கையாளர் அல்லது புதிய நபர்களை எப்படி மறுபடி வரவழைப்பது என்று தெரியவில்லை.
கொரோனாவுக்கு பின், ஓட்டல், சலுான் மற்றும் பிற 'ஆப்லைன்' சில்லறை விற்பனையாளர்கள் தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ள கடுமையாக போராடி வருகின்றனர்.
பல எம்.எஸ்.எம்.இ., கம்பெனிகளின் தயாரிப்புகளை சிறப்பாக இருக்கிறது என்று பலர் பாராட்டினாலும், நல்ல வரவேற்பு கிடைத்தாலும், அடுத்த வாடிக்கையாளர் எப்போது வருவார் அல்லது அவர்களை மீண்டும் அழைத்து வர என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை.
இதற்காக சிறு விற்பனையாளர்கள் அனைவருக்கும் உள்ள இந்த சிக்கலை தீர்க்கவும், கோடிக்கணக்கான வியாபாரிகளின் மதிப்பை கூட்டவும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியும் என்பதற்காக, 'ரீலோ' என்ற ஸ்டார்ட்அப் உருவாக்கப்பட்டது.
இது 'ரீலோ' வாடிக்கையாளர்களுக்கு, அவர்களின் வணிகத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும், சந்தைப்படுத்துதல்களுக்கு அவர்கள் செலவழிக்கும் தொகையை விட மடங்குகள் கூடுதலாக வருவாயை பெறவும் உதவுகிறது.
அந்த சிறு நிறுவனத்தின் சிக்கல் நிறைந்த பகுதிகளையும் கண்காணித்து, அதை சரி செய்ய பயனுள்ள தீர்வுகளை வழங்குகிறார்கள்.
'ரீலோ' என்ன செய்கிறது
ரீலோ வாயிலாக, சில்லறை விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களின் நடத்தையை அடையாளம் கண்டு கண்காணிக்க முடியும். அதாவது அவர்கள் கடைக்குள் நுழைந்தவுடன் சிறப்பாக சேவை செய்ய, அவர்களின் செலவு செய்யும் சக்தி மற்றும் என்னென்ன பர்சேஸ் செய்கிறார்கள் போன்றவற்றை ஆராய்கிறது, தங்களின் விசுவாசமான வாடிக்கையாளர்களை அடையாளம் காண்பதன் மூலம், வணிகர்கள் மேலும் கூடுதல் பயன் அடையலாம்.
இது மார்க்கெட்டிங் அல்லது தொழில்நுட்ப திறன்கள் இல்லாத சில்லறை விற்பனையாளர்களை ஸ்மார்ட் மார்க்கெட்டிங் வாயிலாக தங்கள் விற்பனையை அதிகரிக்க உதவுகிறது. வாடிக்கையாளர்களை அடிக்கடி திரும்பக் கொண்டு வருவதற்கும் ஒவ்வொரு வருகையிலும் அதிகமாகச் செலவிடுவதற்கும், ரீலோ தனிப்பயனாக்கப்பட்ட டிஜிட்டல் வெகுமதிகள், மெசேஜ் அனுப்பும் வசதிகள் மற்றும் தானியங்கி விளம்பரங்களை பயன்படுத்த எளிதான சந்தைப்படுத்தல் திட்டத்தில் ஒருங்கிணைக்கிறது. உணவு மற்றும் உணவு, அழகு, ஆரோக்கியம், மளிகை மற்றும் சில்லறை விற்பனை ஆகிய துறைகளில் இவர்கள் செயல்படுகின்றனர். இணையதளம் www.reelo.io.
இமெயில்: support@reelo.io
சந்தேகங்களுக்கு: இமெயில்: sethuraman.sathappan@gmail.com. அலைபேசி: 98204 - 51259. இணையதளம்: www.startupandbusinessnews.com
- சேதுராமன் சாத்தப்பன் -

