ADDED : ஆக 06, 2011 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : விருதுநகர் மாவட்டத்தில் மூன்று ஊராட்சி தலைவர்கள் பதவி நீக்கத்திற்கு மதுரை ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்தது.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி தலைவர் கோவிந்தன், ராமதேவன்பட்டி ஊராட்சி தலைவர் சீதாலட்சுமி மற்றும் ஆலங்குளம் ஊராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி. இவர்களை பல்வேறு குற்றச்சாட்டுகள் அடிப்படையில் கலெக்டர் பதவி நீக்கம் செய்தார். அதை எதிர்த்து மூவரும் ஐகோர்ட் கிளையில் மனு செய்தனர். பதவி நீக்கத்திற்கு நீதிபதி ஆர்.சுதாகர் இடைக்கால தடை விதித்தார். மனு குறித்து பதிலளிக்கவும் கலெக்டர் உட்பட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.