ADDED : அக் 14, 2025 05:44 AM

சென்னை: 'ஜாதி பெயர்களை நீக்குவ து, கலாசார அடையாளத்தை அழிக்கும் செயல்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில், ஊர்கள், தெருக்கள், நீர்நிலைகள் போன்றவற்றின், ஜாதி அடையாள பெயர்களை நீக்குவதாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணை, பல சமூக மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கல்வி நிலையங்கள் அமைக்க பல ஏக்கர் நிலம் கொடுத்தவர்களின் பெயர்கள், அவர்களின் குலப்பெயர்களுடன் சூட்டப்பட்டன.
அதுபோல், சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழி, மண், மக்களுக்காக போராடியவர் களுக்கு, நன்றி செலுத்தும் வகையில், அவர்களின் சமுதாய, குலப்பெயர்களுடன் சூட்டப்பட்டுள்ளன. தற் போது, ஜாதி பெயர்களை நீக்குவதிலும், புதிய பெயர் சூட்டுவதிலும், முரண்பாடுகள் எழுந்துள்ளன.
ஜாதி பெயரை நீக்க அரசாணை பிறப்பித்த தமிழக அரசே, கோவை மேம்பாலத்திற்கு, ஜி.டி.நாயுடு பெயரை சூட்டி இருக்கிறது. 'நாயுடு' என்பது ஜாதி பெயரை குறிக்காது என, தி.மு.க., அரசு வாதிடுகிறது.
அப்படியெனில், மற்ற தலைவர்களின் பெயர்களுக்கு பின்னால் வரும் அடையாளத்தையும், ஜாதி பெயர் இல்லை என, தி.மு.க., அரசு ஏற்க வேண்டும்.
ஜாதி பெயர்களை நீக்குவதாகக் கூறி, ஒட்டுமொத்தமாக பல சமூகங்களின் அடையாளத்தையே நீக்குவது, சமூக ஒற்றுமைக்கும், பல ஆண்டுகால கலாசார நடைமுறை யையும் அழிப்பதாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.