UPDATED : நவ 10, 2024 03:23 PM
ADDED : நவ 10, 2024 12:54 PM

மதுரை: பிரபல எழுத்தாளரும், ஆன்மிக பேச்சாளருமான இந்திரா சவுந்தரராஜன் மதுரையில் திடீரென காலமானார். அவருக்கு வயது 66.
1958ம் ஆண்டு நவ.,13ம் தேதி பிறந்த இவர் பல்வேறு சிறுகதைகள், நாவல்கள், தொலைக்காட்சி தொடர்களை எழுதி உள்ளார். சிலவற்றை இயக்கி உள்ளார். தென் மாநில ஹிந்து மத பாரம்பரியம் மற்றும் இதிகாசங்களை எழுதுவதில் புகழ்பெற்றவர். இவர் எழுதிய ' என் பெயர் ரங்கநாயகி' என்ற நூல் தமிழ் வளர்ச்சி துறையின் 1999ம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான 3ம் பரிசினை பெற்றது. ஆன்மிகம், சித்தர்கள் தொடர்பான இவரது கதைகள் வாசகர்கள் மத்தியில் பிரபலமானது.
'ஆனந்தபுரத்து வீடு', ' சிருங்காரம்' ஆகிய திரைப்படங்களுக்கும் திரைக்கதை எழுதி உள்ளார். மதுரையில் உள்ள அவரது வீட்டில் குளியல் அறையில் வழுக்கி விழுந்து இந்திரா சவுந்தரராஜன் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
மதுரையை சேர்ந்த அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் அவர் கூறியிருப்பதாவது:
பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் மறைவு கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியவர்.காஞ்சி ஸ்ரீ மகா பெரியவர் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டு அவரைப்பற்றி மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் நடைபெறுகிற மாதாந்திர அனுஷம் நிகழ்வில் 150க்கும் மேற்பட்ட மாதங்கள் தொடர்ச்சியாக காஞ்சி ஸ்ரீ மகா பெரியவா மகிமை என்ற தலைப்பில் பேசியவர்.நெல்லை சங்கீத சபாவில் நடைபெற்ற விழாவில் காஞ்சி சங்கர மடத்தின் சிறப்பு விருதினை ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளிடம் பெற்றவர். ஒரு இலக்கிய மேதையை இந்த சமூகம் இழந்திருக்கிறது.
அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஸ்ரீ மஹா பெரியவரை பிரார்த்தனை செய்து கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.
இவர் எழுதிய நூல்கள்
*எங்கே என் கண்ணன்
*கல்லுக்குள் புகுந்த உயிர்
*நீலக்கல் மோதிரம்
*சோமஜாலம்
*உன்னைக் கைவிடமாட்டேன்
*நந்தி ரகசியம்
*சதியை சந்திப்போம்
*தேவர் கோயில் ரோஜா
*மாய விழிகள்
*மாயமாகப் போகிறாள்
*துள்ளி வருகுது
*நாக பஞ்சமி
*கண் சிமிட்டும் இரத்தினக்கல்
*தங்கக் காடு
*காற்று காற்று உயிர்
*தோண்டத் தோண்டத் தங்கம்
*அஞ்சு வழி மூணு வாசல்
*உஷ்
*மகாதேவ ரகசியம்
*சுற்றி சுற்றி வருவேன்
*காற்றாய் வருவேன்
*கோட்டைப்புரத்து வீடு
*ரகசியமாய் ஒரு ரகசியம்
*சிவஜெயம்
*திட்டி வாசல் மர்மம்
*வைரபொம்மை
*காதல் குத்தவாளி
*கிருஷ்ண தந்திரம்
*பெண்மனம்
*பேனா உளவாளி
*ஜீவா என் ஜீவா
*சொர்ண ரேகை
*விடாது கருப்பு
*இயந்திர பார்வை
*வானத்து மனிதர்கள்
*ருத்ர வீணை பகுதி 1 ,2 ,3 & 4
*விக்ரமா விக்ரமா பகுதி 1 & 2
*கன்னிகள் ஏழுபேர்
*ஆயிரம் அரிவாள் கோட்டை
*தேடாதே தொலைந்து போவாய் பகுதி 1 & 2
*சிவமயம் பகுதி 1 & 2
*விரல் மந்திரா
*நான் ராமசேஷன் வந்திருக்கேன்
*ஒளிவதற்கு இடமில்லை
*அது மட்டும் ரகசியம்
*பல்லவன் பாண்டியன் பாஸ்கரன்
*மேலே உயரே உச்சியிலே பகுதி 1 & 2
*நாக படை
*மாயமாய் சிலர்
*மாய வானம்
*ரங்கா நீதி
*அப்பாவின் ஆத்மா
*சீதா ரகசியம்
*காற்றோடு ஒரு யுத்தம்
*நாக வனம் (இன்னும் வெளியிடப்படவில்லை)
*அசுர ஜாதகம்
*முதல் சக்தி
*இரண்டாம் சக்தி
*மூன்றாம் சக்தி
*நான்காம் சக்தி
*ஐந்தாம் சக்தி
*ஆறாம் சக்தி
*ஏழாம் சக்தி உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதிஉள்ளார்.
தினமலர் ஆன்மிக மலரில்
கடவுளைக் கண்டவர்கள்
கிருஷ்ண ஜாலம்
தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம்
தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் பாகம்-2
வரதா வரம்தா
வாரமலரில் வெளியான
உயிரோடு உறவாடு...
குற்றம் குற்றமே ஆகிய தொடர்கதைகளையும் இந்திரா சவுந்திரராஜன் எழுதி உள்ளார்.
இரங்கல்
இவரின் திடீர் மறைவு வாசகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவரது மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.