sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'பால்வளம்' பறிபோனது ஏன்; மனோ தங்கராஜ் சொல்றதை கேளுங்க!

/

'பால்வளம்' பறிபோனது ஏன்; மனோ தங்கராஜ் சொல்றதை கேளுங்க!

'பால்வளம்' பறிபோனது ஏன்; மனோ தங்கராஜ் சொல்றதை கேளுங்க!

'பால்வளம்' பறிபோனது ஏன்; மனோ தங்கராஜ் சொல்றதை கேளுங்க!

37


UPDATED : செப் 29, 2024 01:24 PM

ADDED : செப் 29, 2024 12:34 PM

Google News

UPDATED : செப் 29, 2024 01:24 PM ADDED : செப் 29, 2024 12:34 PM

37


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தனக்கு ஒதுக்கப்பட்ட துறைகளில் சிறப்பாக செயல்பட்டதாக, பதவி பறிகொடுத்த மனோ தங்கராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளது, கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட மனோ தங்கராஜ் சமூகவலைதளத்தில், வெளியிட்டுள்ள அறிக்கை: 2021ம் ஆண்டு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சராக பொறுப்பேற்ற போது தமிழகத்தின் மென்பொருள் ஏற்றுமதி 9.5 சதவீதம் என்றிருந்தது; ஒரே ஆண்டில் 2022ல் 16.4 சதவீதமாகவும், 2023ல் 25 சதவீதமாகவும் உயர்ந்தது.

பால் உற்பத்தி அதிகரிப்பு




கடந்த 2023ல் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றபோது ஆவின் பால் கொள்முதல் நாளொன்றிற்கு 26 லட்சம் லிட்டராக இருந்தது. 2024ல் ஆவின் வரலாற்றில் முதன் முறையாக 38 லட்சம் லிட்டராக உயர்ந்தது.

விவசாய பெருங்குடி மக்கள் உற்பத்தி செய்யும் பாலுக்கு உரிய விலை கிடைப்பதையும், 10 நாட்களுக்கு ஒரு முறை பால் பணம் பட்டுவாடா செய்வதையும், பொதுமக்களுக்கு எந்தவித தட்டுப்பாடுமின்றி பால் விநியோகம் செய்யும் நிலையை உருவாக்கியதும் மன நிறைவு தருகிறது.

பிரிவினை அரசியல்


கன்னியாகுமரி மாவட்டத்தில் மதவாத சக்திகளின் பிரிவினை அரசியலை முறியடித்து மக்களை ஒன்றுபடுத்தி மாவட்டத்தை வளர்ச்சிப்பாதையில் எடுத்துச் சென்றுள்ளேன். இப்பணிக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி.

மதவாத பாசிச அரசியலை எதிர்த்து, ஜனநாயக அமைப்புகளை பலப்படுத்தி சமூக நீதியை நிலைநாட்ட தமிழ்நாட்டில் எடுக்கப்படும் முன்னெடுப்புகளில் எனது பங்களிப்பு தொடர்ந்து இருக்கும். இவ்வாறு மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.

என்ன காரணம்


'தன் மீது தவறு எதுவும் இல்லை, தனக்கு ஒதுக்கப்பட்ட துறைகளில் தான் மிகச்சிறப்பாக செயல்பட்டேன்' என்று கூறும் வகையில் மனோ தங்கராஜ் அறிக்கை அமைந்துள்ளது. அப்படியெனில், அமைச்சர் என்ன காரணத்தால் நீக்கப்பட்டார் என்பதை ஆளும் கட்சி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.






      Dinamalar
      Follow us