தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ கருவேல மரங்களை அகற்றி வண்டல் மண் விற்க கோரிக்கை

 கருவேல மரங்களை அகற்றி வண்டல் மண் விற்க கோரிக்கை

 கருவேல மரங்களை அகற்றி வண்டல் மண் விற்க கோரிக்கை


ADDED : ஜூன் 14, 2026 06:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 14, 2026 06:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழக உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம் கூறியதாவது:

சென்னை உயர் நீதிமன்றம், சீமைக்கருவேல மரங்களை அகற்ற கால அளவு நிர்ணயித்தும், தமிழகத்தின் பல பகுதிகளில், அந்த மரங்கள் அகற்றப் படாமல் உள்ளன.

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில், தனியார் நிலங்களில் கருவேல மரங்களை வெட்டி, கரிமூட்டம் செய்து அடுப்புக்கரியாக பல ஆண்டுகளாக விற்கின்றனர்.

அதேபோல், அரசு நிலங்களில் கருவேல மரங்களை அகற்ற, மாவட்ட நிர்வாகம், 'டெண்டர்' வெளியிட்டால், அதில் கிடைக்கும் வருமானத்தில், அரசின் பல திட்டங்களுக்கு பயன்படுத்த முடியும். இதனால் நிலத்தடி நீர் உயர வாய்ப்பாக இருக்கும்.

தென் மாவட்டங்களில் பல பகுதிகளில் உள்ள குளம், கண்மாய்கள், அணைக்கட்டுகளில் தண்ணீர் இல்லாத பகுதிகளில் கருவேல மரங்களும் வளர்ந்துள்ளன.

இதில் சேர்ந்துள்ள வண்டல் மண்ணை தோண்டி எடுத்து, மண்பாண்டம், செங்கல் தயாரிப்பதற்கு, அரசே விற்கலாம். இதனால் அரசுக்கு வருவாய் கிடைக்கும். இதை வலியுறுத்தி, முதல்வர் விஜய்க்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us