ADDED : மார் 19, 2024 11:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழக தொழில் துறை மின் நுகர்வோர்கள்கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ், முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனு:
மின் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்ட குறு, சிறு தொழில்களை பாதுகாக்க, எங்களின் கோரிக்கையை ஏற்று, உச்ச நேர மின் கட்டணத்தை ரத்து செய்தும்; 12 கிலோ வாட் கீழ் மின் இணைப்பு பெற்ற குறுந்தொழில்களின் கட்டணம் மாற்றி உத்தரவிட்டதற்கு நன்றி.
உயர்த்தப்பட்ட நிலை கட்டணத்தை முழுதுமாக திரும்ப பெற்றோ அல்லது ஏற்கனவே இருந்த, 35 ரூபாய் கட்டணத்தில், 50 சதவீதம் உயர்த்தியோ எங்கள் தொழிலை பாதுகாக்க வேண்டும்.
ஆண்டுக்கு ஒரு முறை மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள ஆணையம் வழங்கிய அனுமதியை, குறு, சிறு தொழில்களின் நலனை கருத்தில் கொண்டு குறைந்தது, இரு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

