தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ கல்வி உரிமை சட்டத்தில் இட ஒதுக்கீடு: வருமான உச்சவரம்பு நிர்ணயிக்க முடியாது ஐகோர்ட் உத்தரவு

 கல்வி உரிமை சட்டத்தில் இட ஒதுக்கீடு: வருமான உச்சவரம்பு நிர்ணயிக்க முடியாது ஐகோர்ட் உத்தரவு

 கல்வி உரிமை சட்டத்தில் இட ஒதுக்கீடு: வருமான உச்சவரம்பு நிர்ணயிக்க முடியாது ஐகோர்ட் உத்தரவு


ADDED : செப் 12, 2026 11:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 12, 2026 11:03 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: 'கல்வி உரிமை சட்டத்தின் கீழ், 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவர்களின் பெற்றோருக்கு, வருமான உச்ச வரம்பு நிர்ணயிக்க உத்தரவிட முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:

25 சதவீத இடங்கள் மத்திய அரசின் கல்வி உரி மை சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் பட்டியலின, பழங்குடியின மாணவர்களுக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கும், 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

பொருளாதார ரீதியில் பின்தங்கிய குழந்தைகளின் பெற்றோருக்கு ஆண்டுக்கு, 2 லட்சம் ரூபாய் வருமான உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டு உள்ள நிலையில், பட்டியலின மற்றும் பழங்குடியின குழந்தைகளின் பெற்றோருக்கு, எந்த வருமான உச்ச வரம்பும் நிர்ணயிக்கப் படவில்லை.

சமூக ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு, வருமான உச்ச வரம்பு நிர்ணயிக்க வேண்டும். இல்லையெனில் வசதியானவர்கள், ஜாதி அடிப்படையில் இந்த சலுகையை பெற அதிக வாய்ப்புள்ளது.

எனவே, பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு வருமான உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டது போல, சமூக ரீதியாக பின்தங்கியவர்களுக்கும் நிர்ணயிக்க வேண்டும்.

மஹாராஷ்டிரா, ஆந்திர மாநிலங்களில், சமூக ரீதியில் பின்தங்கிய பிரி வினருக்கு வருமான உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகத்திலும் நிர்ணயிக்கக் கோரி, 2025ம் ஆண்டு அக்டோபரில், பள்ளிக் கல்வித் துறைக்கு அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள் முருகன் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

தள்ளுபடி அப்போது, தமிழக அரசு தரப்பில், 'கல்வி உரிமை சட்டத்தில், பட்டியலின, பழங்குடியின மாணவர்களின் பெற்றோருக்கு வருமான உச்ச வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்று கூறப்படவில்லை.

'இது, முழுக்க முழுக்க அரசின் கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது. எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல' என, தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதிகள், 'பட்டியலின, பழங்குடியின மாணவர்களின் பெற்றோருக்கு வருமான உச்ச வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என சட்டத்தில் கூறப்படாத நிலையில், அவர்களுக்கு வருமான உச்ச வரம்பு நிர்ணயிக்க உத்தரவிட முடியாது' என கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

சென்னை, செப். 13-

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதற்கு, காற்றாலை மின் உற்பத்தி குறைவு, சூரிய சக்தி மின் திட்டங்கள் முடக்கம் உள்ளிட்டவை, முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.

தமிழகத்தில் தினமும் சராசரியாக 16 ஆயிரம் மெகா வாட் மின் தேவை உள்ளது. கோடைக் காலத்தில் இது 20 ஆயிரம் மெகாவாட்டை எட்டும். இந்த ஆண்டில் இன்னமும் வெயில் வாட்டுவதால், கடந்த ஜூலை 16ல் மின் தேவை 21 ஆயிரத்து 724 மெகாவாட்டாக புதிய உச்சத்தை எட்டியது.

தமிழகம் மட்டுமின்றி, பல மாநிலங்களில் மின் தேவை அதிகம் உள்ளதால், மின்சார சந்தையில் 1 யூனிட் மின்சாரம் விலை சராசரியாக, 20 ரூபாய்க்கு மேல் உள்ளது. அந்த விலைக்கு மின்சாரம் வாங்க, தமிழக மின் வாரியம் தயக்கம் காட்டுகிறது.

காற்றாலைகளிலும் மின்சார உற்பத்தி குறைந்துள்ளதால், 1,000 முதல் 1,500 மெகாவாட் வரை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, சென்னை தவிர, பிற மாவட்டங்களில் தினமும் ஒரு மணி நேரம், அறிவிக்கப்படாத மின் வெட்டு செய்யப்படுகிறது.

புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியாளர்கள் சங்க முதன்மை ஆலோசகர் வெங்கடாசலம் கூறிய தாவது:

'எல் நினோ' காரணமாக, கோடைக் காலம் நீட்சி அடைந்துள்ளதால், தினசரி மின் தேவை அளவு குறையவில்லை

காற்றாலை மின் நிலையங்களில், தினமும் சராசரியாக 10 கோடி யூனிட்டுக்கு மேல் மின்சாரம் கிடைத்த நிலையில், கடந்த ஒரு வாரமாக 5 கோடி யூனிட்டாக குறைந்துள்ளது

புதிய காற்றாலை, சூரியசக்தி மின்சாரத்திற்கு வழிமுறைகள் வகுக்கப்படாததால், புதிய மின் திட்டங்கள் ஏதும் நடைமுறைக்கு வராமல், முதலீட்டாளர்கள் குழப்பம் அடைந்து உள்ளனர்

மின் வாரிய மூத்த அதிகாரிகள் புதியவர்கள் என்பதால், இந்த பிரச்னையை கையாள, உரிய ஆலோசனைகளை, கீழ்நிலை அதிகாரிகளுக்கு வழங்குவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன

ஊழலற்ற ஆட்சி நடத்த த.வெ.க., அரசு விரும்புவதால், மின் திட்டங்களை முறைப்படுத்துவதில், உரிய முடிவுகளை விரைவாக எடுக்க தயக்கம் காட்டுகிறது

நீண்ட அனுபவம் உள்ள மின்சார மேம்பாடு தொடர்பான சங்கங்களின் ஆலோசனைகளை, அதிகாரிகள் அலட்சியம் செய்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் தமிழக மின் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கோடைக்காலம் எதிர்பாராத வகையில் நீடித்த நிலையில், மின் தேவை அதிகரித்துள்ளது. காற்றாலை மின் உற்பத்தியும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. எனவே, பல்வேறு நிறுவனங்கள் மற்றும் வெளிச்சந்தையில் இருந்து கூடுதலாக, 2,000 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக, 'கிரிட்' எனப்படும் மின் தொகுப்பின் நிலைமை சீராக உள்ளது. மேலும், மின் வினியோக நிலையை, மின் வாரிய உயர்மட்ட அதிகாரிகள் குழுவினர் கண்காணித்து, உரிய உத்தரவுகளை வழங்கி வருகின்றனர். மின் வினியோக பாதிப்புகளை சரி செய்ய, சிறப்பு குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வழக்கமான பராமரிப்பு பணிகளுக்கான மின் தடைகளை, இயன்ற வரை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரவு நேரங்களிலும் தடையற்ற மின்சார வினியோகத்தை உறுதி செய்ய, மின் வாரியம் விழிப்புணர்வுடன் செயல்படுகிறது. புகார்களுக்கு, 24 மணி நேரமும் இயங்கும் நுகர்வோர் சேவை மையத்தை, 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



3 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' கொள்முதல் 'டெண்டர்' ரத்து மின் இணைப்புகளில் ஆளில்லாமல் கணக்கெடுக்க, 'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்த மின் வாரியம் முடிவு செய்தது. இந்த மீட்டரில், கணக்கெடுக்க வேண்டிய தேதி, மென் பொருள் வடிவில் பதிவேற்றம் செய்யப்படும். இதனால், தொலை தொடர்பு வசதி வாயிலாக மின் பயன்பாடு தானாகவே கணக்கெடுக்கப்பட்டு, நுகர்வோருக்கு எஸ்.எம்.எஸ்., வாயிலாக அனுப்பப்படும் . அதன்படி, 20 ஆயிரம் கோடி ரூபாயில், 3.04 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த, கடந்த 2025 மார்ச்சில் மின் வாரியம் டெண்டர் கோரியது. இதில், 50 நிறுவனங்கள் பங்கேற்றன. இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், ஸ்மார்ட் மீட்டர் டெண்டர் சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது. டெண்டரில் பங்கேற்ற நிறுவனங்கள் செலுத்திய உத்தர வாத தொகையை, மின் வாரியம் திரும்ப வழங்கி உள்ளது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us