மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்; சட்டசபை ஒத்திவைப்பு
மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்; சட்டசபை ஒத்திவைப்பு
ADDED : ஜன 07, 2025 09:57 AM

சென்னை: சட்டசபையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் எம்.எல்.ஏ., இளங்கோவன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று (ஜன.,06) 9.30 மணிக்கு கூடியது. 9.29 மணிக்கு சபைக்கு கவர்னர் வந்ததும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. மூன்று நிமிடங்களில் தன் உரையை வாசிக்காமல், சபையை விட்டு கவர்னர் வெளியேறினார். அச்சிடப்பட்ட கவர்னர் உரையில் இடம் பெற்ற வாசகங்களை, சபாநாயகர் அப்பாவு படித்தார்.
அவர் படித்ததை மட்டும் சபைக்குறிப்பில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை, சபை முன்னவரும், அமைச்சருமான துரைமுருகன் கொண்டு வந்தார். குரல் ஓட்டெடுப்பு வாயிலாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இன்று (ஜன.,07) சட்டசபை காலை 9.30 மணிக்கு 2வது நாளாக கூடியது.
அவை கூடியதும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் எம்.எல்.ஏ., இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ., தமிழ்மொழி ராஜதத்தன் ஆகியோர் மறைவுக்கு சபாநாயகர் அப்பாவு இரங்கல் தீர்மானம் வாசித்தார்.பின்னர் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு , சட்டசபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

