ADDED : ஆக 20, 2025 02:51 AM
சாலை போக்குவரத்து நிறுவனம் சார்பில், அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர், நடத்துனர்களுக்கான தேர்வுகள், கடந்த மாதம் 27ம் தேதி நடந்தன. 22,492 பேர் விண்ணப்பித்ததில், 19,405 பேர் தேர்வெழுதினர்.
தேர்வுகளை நடத்திய அண்ணா பல்கலை, இன்று, 'https://tancet.annauniv.edu/tancet/irt/index.php என்ற இணையதள இணைப்பின் வாயிலாக, முடிவுகளை வெளியிடுகிறது. பதிவெண், பிறந்த தேதி உள்ளிட்டவற்றை உள்ளீடு செய்து அறியலாம்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகமான, 'தாட்கோ' சார்பில், எஸ்.சி., - எஸ்.டி., பட்டதாரிகளுக்கு, 'ட்ரோன்' தயாரிப்பு, சோதனை, பறக்கும் தொழில்நுட்பம், 'எம்பெடட் சென்சார்' சோதனை, 'பிரின்டட் சர்க்யூட் போர்டு' வடிவமைப்பு உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. பயிற்சியின்போது, உணவு, தங்குமிடமும் வழங்கப்படும். மேலும் தகவல்களை, 'www.tahdco.com' என்ற இணையதளத்தில் அறியலாம்.