sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'ரவுடிகளுக்கு எதிரான அதிரடியால் பழிக்கு பழி கொலைகள் குறைந்தன'

/

'ரவுடிகளுக்கு எதிரான அதிரடியால் பழிக்கு பழி கொலைகள் குறைந்தன'

'ரவுடிகளுக்கு எதிரான அதிரடியால் பழிக்கு பழி கொலைகள் குறைந்தன'

'ரவுடிகளுக்கு எதிரான அதிரடியால் பழிக்கு பழி கொலைகள் குறைந்தன'

9


UPDATED : மே 20, 2025 05:07 AM

ADDED : மே 20, 2025 05:02 AM

Google News

UPDATED : மே 20, 2025 05:07 AM ADDED : மே 20, 2025 05:02 AM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : ரவுடிகளுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகள் காரணமாக, நான்கு மாதங்களில் பழிக்குப் பழி வாங்கும் கொலைகள் குறைந்துள்ளதாக, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:


கடந்த 2024ல், ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான நான்கு மாதங்களில், 501 கொலை வழக்குகள் பதிவாகி இருந்தன. இந்த ஆண்டில் அதே காலகட்டத்தில், 483 கொலைகளாக குறைந்துள்ளன.

அத்துடன், ரவுடிகளுக்கு இடையேயான பழிக்கு பழி வாங்கும் கொலைகளும் குறைந்துள்ளன. அதாவது, கடந்த ஆண்டில் ஏப்ரல் மாதம் வரை, 22 கொலைகள் நடந்த நிலையில், இந்த ஆண்டு, 18 தான் நடந்துள்ளன.

Image 1420409ஓ.சி.ஐ.யு., எனப்படும், திட்டமிட்ட குற்றப்புலனாய்வு பிரிவு வாயிலாக, ரவுடிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். உளவுத்துறை போலீசார் வாயிலாகவும் ரகசிய தகவல்கள் திரட்டப்பட்டு, ரவுடிகளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதன் காரணமாக, பழிக்கு பழி வாங்கும் வகையில், ரவுடிகள் செய்யும் கொலைகள் வெகுவாகக் குறைந்துள்ளன.

Image 1420410நான்கு ஆண்டுகளில், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக, 4,460 பேர் எச்சரிக்கை செய்யப்பட்டனர். இதன் வாயிலாக, 326 கொலைகள் தடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.Image 1420411






      Dinamalar
      Follow us