sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 25, 2026 ,பங்குனி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வருவாய்த்துறை ஊழியர்கள் ஸ்டிரைக் எதிரொலி; காவிரி டெல்டாவில் நெல் கொள்முதல் பாதிப்பு

/

வருவாய்த்துறை ஊழியர்கள் ஸ்டிரைக் எதிரொலி; காவிரி டெல்டாவில் நெல் கொள்முதல் பாதிப்பு

வருவாய்த்துறை ஊழியர்கள் ஸ்டிரைக் எதிரொலி; காவிரி டெல்டாவில் நெல் கொள்முதல் பாதிப்பு

வருவாய்த்துறை ஊழியர்கள் ஸ்டிரைக் எதிரொலி; காவிரி டெல்டாவில் நெல் கொள்முதல் பாதிப்பு

3


UPDATED : பிப் 27, 2026 10:52 PM

ADDED : பிப் 27, 2026 08:16 PM

Google News

3

UPDATED : பிப் 27, 2026 10:52 PM ADDED : பிப் 27, 2026 08:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாடுதுறை: வருவாய்த்துறை ஊழியர்கள் ஸ்டிரைக் எதிரொலியாக டெல்டாவில் நெல் கொள்முதல் பாதிக்கப்பட்டு உள்ளது.

காவிரி கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்டத்தில் 1 லட்சத்து 70 ஆயிரம் ஏக்கரிலும், ஒருங்கிணைந்த காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 10 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சம்பா நெல் சாகுபடி செய்துள்ளனர்.

தற்போது கதிர் முற்றி அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில் மாநிலம் முழுவதும் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த வருவாய் துறை ஊழியர்கள் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊழியர்களின் போராட்டத்தால் தாலுக்கா அலுவலகங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. எந்த பணிகளும் நடைபெறவில்லை.

வருவாய்த் துறை ஊழியர்களின் தொடர் போராட்டத்தால் விவசாயிகள் தங்கள் விளைவித்த பயிரை அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்கு சிட்டா அடங்கல் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிட்டா அடங்கல் கிடைத்தால் மட்டுமே நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முன்பதிவு செய்து நெல் விற்பனை செய்ய முடியும்.

விவசாயிகளுக்கு சிட்டா அடங்கல் கிடைக்காததால் மயிலாடுதுறை மாவட்டத்தில் 184, திருவாரூர் மாவட்டத்தில் 540, நாகப்பட்டினம் மாவட்டத்தில் 168, தஞ்சாவூர் மாவட்டத்தில் 690 கொள்முதல் நிலையங்கள் உட்பட டெல்டா மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நெல்லின் காய்ச்சல் அதிகரித்து வருவாய் இழப்பு ஏற்படும் என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தமிழக அரசு அலட்சியம் காட்டாமல் உடனடியாக வருவாய் துறை ஊழியர்கள் பணிக்கு திரும்புவதற்கான நடவடிக்கைகளை எடுத்து விவசாயிகளை நஷ்டத்தில் இருந்து மீட்க வேண்டும். அல்லது சிட்டா அடங்கல் தடையின்றி பெற மாற்று ஏற்பாட்டை அரசு செய்ய வேண்டு என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.






      Dinamalar
      Follow us