உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூலை 03, 2026 07:19 AM

அ நிறம் | அளவு
தமிழகத்தில், அரிசி விலை கிலோவுக்கு 10 ரூபாய் வரை திடீரென உயர்ந்துள்ளது. இது, சாமானிய மற்றும் நடுத்தர மக்களை பெருமளவில் பாதித்துள்ளது. மோடி அரசு, உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ், விலையில்லா அரிசி வழங்குவதன் வழியே, ஏழை மக்களின் சுமை ஓரளவு குறைந்துள்ளது. எனினும், வெளிச்சந்தையில் அரிசி விலை தொடர்ந்து உயர்ந்து வருவது கவலை தருகிறது. எனவே, அரிசி ஆலைகளுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் மின் கட்டணத்தை, தமிழக வெற்றிக் கழக அரசு ரத்து செய்வதோடு, மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். லாரி வாடகையை குறைக்கும் விதமாக, பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரியையும் குறைக்க வேண்டும். ஏரி, குளங்கள் மற்றும் கால்வாய்களை துார்வாரி, விவசாயத்துக்கு தடையற்ற தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மாதந்தோறும் மின் கணக்கீடு என்ற தேர்தல் வாக்குறுதியை, த.வெ.க., அரசு நிறைவேற்ற வேண்டும்.
- நயினார் நாகேந்திரன்
தலைவர், தமிழக பா.ஜ.,
