ADDED : அக் 28, 2025 07:16 AM

வெளிமாவட்ட அரிசி அரவை ஆலைகளுக்கு, ரயில்களில் அனுப்புவதற்காக, கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு, லாரிகளில் கொண்டு வரப்பட்ட, 36,000 நெல் மூட்டைகள், 11 நாட்களாகியும் அனுப்பி வைக்கப்படவில்லை.
இதனால், மழையில் நனைந்து, முளைக்க துவங்கியுள்ளன. இதுதான் தி.மு.க., அரசின் சாதனை. இப்போதும் கூட, அந்த நெல் மூட்டைகளை அனுப்ப, எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
இதே நிலை நீடித்தால், அந்த நெல் பயன்படுத்த தகுதியற்றதாக மாறிவிடும் ஆபத்து உள்ளது. கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை பாதுகாப்பதில், தி.மு.க., அரசு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.
கும்பகோணம் ரயில் நிலையத்தில், முளைத்த நிலையில் லாரிகளில் இருக்கும் நெல் மூட்டைகள், பயன்பாட்டுக்கு உகந்தவையா என ஆய்வு செய்ய வேண்டும். பயன்படுத்த முடியும் என்றால், உடனடியாக அரிசி அரவை ஆலைகளுக்கு அனுப்ப வேண்டும்.
- அன்புமணி
தலைவர், பா.ம.க.,

