sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தலைவர்கள் பெயரில் நடத்தப்படும் கலவரத்தை நியாயப்படுத்த முடியாது: ஐகோர்ட் உத்தரவு

/

தலைவர்கள் பெயரில் நடத்தப்படும் கலவரத்தை நியாயப்படுத்த முடியாது: ஐகோர்ட் உத்தரவு

தலைவர்கள் பெயரில் நடத்தப்படும் கலவரத்தை நியாயப்படுத்த முடியாது: ஐகோர்ட் உத்தரவு

தலைவர்கள் பெயரில் நடத்தப்படும் கலவரத்தை நியாயப்படுத்த முடியாது: ஐகோர்ட் உத்தரவு

5


ADDED : நவ 12, 2025 06:18 AM

Google News

5

ADDED : நவ 12, 2025 06:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: 'ஒரு தலைவரின் உண்மையான தொலைநோக்கு பார்வை அல்லது சித்தாந்தத்தை பொருட்படுத்தாமல், அவரது பெயரில் நடத்தப்படும் எந்தவொரு கலவரம் அல்லது வன்முறை செயலை நியாயப்படுத்த முடியாது' என, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

கேரளாவை சேர்ந்த விவசாயி அபுபக்கர், 50. இவர், 2012 அக்., 30ல் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவிற்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது கமுதியில் நடந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியின் போது மூவர் கொல்லப்பட்டது தொடர்பாக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கீழக்கரை ரோடு ஆர்.எஸ்.மடை அருகே சிலர் கார் மீது கற்களை வீசினர்.

அது அபுபக்கரின் நெற்றி, வலது கண்ணில் தாக்கியது. காயமடைந்த அவர் இறந்தார்.

ராமநாதபுரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்தனர். ராமநாதபுரம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.

'ஒரு செயல் மரணத்தை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிந்தே செய்தல்; ஆனால் மரணத்தை ஏற்படுத்தும் எண்ணம் இல்லாதது' சட்டப்பிரிவின் கீழ் ஆர்.எஸ்.மடை முத்துகாளீஸ்வரன் என்பவருக்கு, 2022ல் ஆயுள் தண்டனை விதித்தது.

இதை எதிர்த்து அவர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ஆர்.பூர்ணிமா அமர்வு பிறப்பித்த உத்தரவு:

கார் மீது மனுதாரர் கற்களை வீசினார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. சந்தேகத்திற்கிடமின்றி குற்றச்சாட்டை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டது. கீழமை நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

கேரளாவிலிருந்து ஏர்வாடி தர்காவில் வழிபட வந்த அப்பாவி அபுபக்கர் இறந்தார்.

அவரது சட்டப்பூர்வ வாரிசுகளின் துயர நிலையை கருத்தில் கொண்டு, போதிய இழப்பீடு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்க ராமநாதபுரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு கலெக்டருக்கு பரிந்துரைக்க வேண்டும்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் இன்று உயிருடன் இருந்திருந்தால், இந்த குரூரமான செயலை கடுமையாக கண்டித்திருப்பார். ஏனெனில், அவரது கருத்துப்படி 'விவேகமற்ற வீரம் முரட்டுத்தனமாகும்' என்பவதாகும்.

ஒரு தலைவரின் உண்மையான தொலைநோக்கு பார்வை அல்லது சித்தாந்தத்தை பொருட்படுத்தாமல், அவரது பெயரில் நடத்தப்படும் எந்தவொரு கலவரம் அல்லது வன்முறை செயலை நியாயப்படுத்த முடியாது.

அவ்வாறு செய்வது அத்தலைவரின் மரியாதை, அவர் வலியுறுத்திய அடிப்படை கொள்கைகளை அவமதிப்பதற்கு சமமானது என்பதை சுட்டிக்காட்டுவது மிகையாகாது. இவ்வாறு உத்தர விட்டனர்.






      Dinamalar
      Follow us