ADDED : ஜூலை 12, 2011 12:30 AM
நரிக்குடி : திருநெல்வேலி கட்டாலங்குளத்தில் நடந்த அழகுமுத்துக்கோன் குருபூஜையில் பங்கேற்ற, பரமக்குடி பகுதியைச் சேர்ந்த சிலர் வாகனங்களில், நரிக்குடி அருகே மறையூர் வழியாகச் சென்றனர்.
மாலை 6.30 மணிக்கு, டூவீலரில் சென்ற இருஞ்சிறையைச் சேர்ந்த முருகன், மனைவி சாந்தி மீது ஒரு வேன் மோதியது. காயமடைந்த இருவரும், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இதைக் கண்டித்து ஒரு மகேந்திரா வேன் மீது, மறையூர் பகுதியைச் சேர்ந்த சிலர் கற்களை வீசினர். இதனால், வேனில் வந்தவர்கள் மாலை 6.30 முதல் இரவு 8.30 மணி வரை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள், சுற்றுப்புற வீடுகள் மீதும் கற்களை வீசினர். இதைக் கண்டித்து, மறையூர் காலனியைச் சேர்ந்த மக்கள், இரவு 8.45 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதித்தது. போலீசார் சமரசத்தில் ஈடுபட்டுள்ளனர்.