sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மலைப்பகுதி மக்களுக்காக ரூ.500 கோடியில் சாலை வசதி

/

மலைப்பகுதி மக்களுக்காக ரூ.500 கோடியில் சாலை வசதி

மலைப்பகுதி மக்களுக்காக ரூ.500 கோடியில் சாலை வசதி

மலைப்பகுதி மக்களுக்காக ரூ.500 கோடியில் சாலை வசதி


ADDED : ஆக 06, 2025 01:50 AM

Google News

ADDED : ஆக 06, 2025 01:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:''தமிழகத்தில் மலைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் சென்று, வர வசதியாக, 500 கோடி ரூபாயில் சாலை வசதிகள் ஏற்படுத்தி தர, முதல்வரிடம் வலியுறுத்தி உள்ளேன்,'' என, வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.

நீலகிரி வரையாடு குறித்த இரண்டாவது ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு அறிக்கையை, அமைச்சர் ராஜகண்ணப்பன், சென்னையில் வெளியிட்டார்.

பின், அவர் பேசியதாவது:

இரண்டாவது ஒருங்கிணைந்த நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு, நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில், 177 வரையாடு வாழ்விடப் பகுதிகளில் நடந்தது.

கணக்கெடுப்பு இதேபோல், கேரளாவிலும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தமிழகத்தில் 1,303 வரையாடுகளும், கேரளாவில் 1,352 வரையாடுகளும் உள்ளன. தமிழகத்தில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், 21 சதவீதம் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில், 108 வனத்துறை அதிகாரிகள் உள்ளனர். அவர்களில், 80 சதவீதம் பேர் வட மாநிலத்தவர்கள். அதை பற்றி நாம் கவலைப்பட வேண்டாம்.

வரலாற்று ரீதியாகவும், கலாசார ரீதியாகவும், தமிழ் மண்ணோடு பின்னி பிணைந்துள்ள வரையாடுகளை பாதுகாக்க வேண்டியது நம் கடமை.

தமிழகத்தில் மலைப் பகுதிகளில் வாழும் பழங்குடியினர் அனைவரும் ஓட்டளிக்க, தமிழக அரசு அனைத்து வசதிகளையும் செய்து தருகிறது.

விரைவில் அறிவிப்பு அவர்கள் சென்று வரும் சாலைகளை மேம்படுத்த, முதல்வரிடம் 500 கோடி ரூபாய் கேட்டுள்ளேன்.

நிதி துறையிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் அதற்கான அறிவிப்புகள் வரும்.

நிகழ்ச்சியில், வனத்துறை செயலர் சுப்ரியா சாஹூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கோவணம் கட்டிய மிராசுதாரர் மக்கள் சம்பாதிக்கும் பணத்தை சந்தோஷமாக அனுபவிக்க நினைக்கின்றனர். முன்பெல்லாம் சேமிப்பு இருக்கும்; இப்போது இல்லை. என் அப்பா பெரிய மிராசுதாரர்; ஆனால், அவர் கோவணம் தான் கட்டி இருப்பார். சமீபத்தில் சீமான் நடத்திய ஆடு, மாடு மேய்க்கும் போராட்டம் தேவையில்லாதது. - ராஜகண்ணப்பன் வனத்துறை அமைச்சர், தி.மு.க.,








      Dinamalar
      Follow us