ராட்வீலரை தொடர்ந்து சைபீரியன் ஹஸ்கி: சென்னையில் மற்றொரு நாய்க்கடி சம்பவம்
ராட்வீலரை தொடர்ந்து சைபீரியன் ஹஸ்கி: சென்னையில் மற்றொரு நாய்க்கடி சம்பவம்
ADDED : மே 08, 2024 05:31 PM

சென்னை: சென்னையில் ராட்வீலர் நாய் சிறுமியை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது ஆலந்தூரில் 11 வயது சிறுவனை சைபீரியன் ஹஸ்கி என்ற ரக நாய் கடித்துள்ளது. இது குறித்து நாய் உரிமையாளர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர்.
சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் உள்ள மாநகராட்சி பூங்காவில் 5 வயது சிறுமியை ராட்வீலர் நாய்கள் கடித்து குதறின. இதில் படுகாயமடைந்த சிறுமியை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நாய்களின் உரிமையாளர் புகழேந்தி என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், சிறுமியை கடித்த 2 நாய்களையும் 7 நாட்களுக்குள் அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனையடுத்து அந்த நாய்கள் மதுரைக்கு இடமாற்றம் செய்யப்பட்டன.
இந்த சம்பவம் நடந்து இரண்டே நாளில் மற்றுமொரு சம்பவம் நடந்தேறியுள்ளது. ஆலந்துார் போலீஸ் குடியிருப்பில் விளையாடிக் கொண்டிருந்த அஸ்வந்த் (வயது 11) என்ற சிறுவனை சைபீரியன் ஹஸ்கி வகை நாய் கடித்துள்ளது. இது குறித்து நாய் உரிமையாளர் மீது பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

