உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : நவ 18, 2026 09:12 PM
ADDED : நவ 18, 2026 09:10 PM

அ நிறம் | அளவு
காட்பாடி: காட்பாடி அருகே, மலை அடிவாரத்தில் கஞ்சா விற்ற ரவுடி மணிகண்டன், 33, கைது செய்யப்பட்டார்.
வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த பள்ளிக்குப்பம் மலை அடிவாரப் பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காட்பாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில், அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு விற்பனைக்காக, 1.5 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்திருந்த நபரை, போலீசார் கையும் களவுமாக மடக்கி பிடித்தனர்.
விசாரணையில், பிடிபட்டவர் பள்ளிக்குப்பத்தைச் சேர்ந்த ரவுடி மணிகண்டன் என்பது தெரிந்தது. இதையடுத்து அவரிடமிருந்த, 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், மணிகண்டன் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.
