ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்: வனப்பகுதியில் பரபரப்பு
ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்: வனப்பகுதியில் பரபரப்பு
ADDED : மார் 28, 2025 09:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே, வனப்பகுதியில் பதுங்கிய ரவுடியை போலீசார் சுட்டு பிடித்தனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு; சரித்திரப் பதிவேடு குற்றவாளி அசோக் என்பவர் மீது ஏராளமான கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன. பல்வேறு வழக்குகளில் அவர் போலீசாரால் தேடப்பட்டு வரும் நபராவார்.
இந்நிலையில் இன்று செங்கல்பட்டு அடுத்த ஆப்பூர் வனப்பகுதியில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயனன்றுள்ளார். அப்போது, அசோக் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் காயம் அடைந்த அவரை மீட்ட போலீசார், சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.