ADDED : செப் 27, 2024 11:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:திருநெல்வேலியைச் சேர்ந்தவர் ரவுடி எஸ்டேட் மணி, 40. இவர் மீது, கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. துாத்துக்குடியைச் சேர்ந்த பசுபதி பாண்டியனின் ஆதரவாளர்.
பசுபதிபாண்டியன் கொல்லப்பட்ட பின், எஸ்டேட் மணி மும்பைக்கு சென்று தொழில் செய்து வந்தார். அவர், வேலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது, அவருக்கும், மற்றொரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது.
இந்த வழக்கிலும் எஸ்டேட் மணி கைது செய்யப்பட்டார். ஜாமினில் வெளி வந்தபின், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார். அவரை வேலுார் மாவட்ட தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், கேரள மாநிலம் மூணாறில், எஸ்டேட் மணி பதுங்கி இருப்பது தெரியவந்தது. தனிப்படை போலீசார் அங்கு முகாமிட்டு, நேற்று அவரை கைது செய்தனர்.