UPDATED : ஏப் 02, 2025 08:18 PM
ADDED : ஏப் 02, 2025 03:16 PM

கடலுார்: கடலூரில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி விஜய் என்பவரை போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த பிரபல ரவுடி விஜய். இவர் மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடலூரில் லாரி ஓட்டுநர்களை அரிவாளால் வெட்டி வழிப்பறி செய்த சம்பவத்தில் தொடர்புடையவர். இவனை போலீசார் வலைவீசி தேடிவந்தனர்.
கடலூரில் பதுங்கி இருந்த ரவுடி விஜய்யை, போலீசார் பிடிக்க முயன்ற போது அரிவாள் கொண்டு தாக்குதல் நடத்தி உள்ளான். இதில் இரண்டு போலீசார் காயம் அடைந்தனர். சுற்றிவளைத்துப் பிடிக்கும் போது போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓடும் போது, போலீசாரின் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
கடந்த சில தினங்களாக, குற்றச்சம்பவங்களை தடுக்க என்கவுன்டர் ஆயுதத்தை அரசு கையில் எடுத்துள்ளது. கடந்த கால சில சம்பவங்கள் பின்வருமாறு;
* சென்னையில் நகை பறிப்பில் ஈடுபட்ட வட மாநில கொள்ளையன் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.
* தேனி மாவட்டத்தில் போலீஸ்காரரை கொலை செய்த நபர் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
* மதுரை ரிங் ரோட்டில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பிரபல ரவுடி சுபாஸ் சந்திர போஸ் கொல்லப்பட்டான்.

