ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு முதல் குற்றவாளி ரவுடி நாகேந்திரன் உயிரிழப்பு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு முதல் குற்றவாளி ரவுடி நாகேந்திரன் உயிரிழப்பு
ADDED : அக் 09, 2025 11:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த ரவுடி நாகேந்திரன் உயிரிழந்தார்.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த, கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த ரவுடி நாகேந்திரனுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. இவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
அவருக்கு கல்லீரல் பாதிப்பு காரணமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். நாகேந்திரன் மீது 5 கொலை வழக்குகள், 14 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 28 வழக்குகள் உள்ளன.