ADDED : டிச 09, 2024 04:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், புயல் நிவாரண நிதிக்கு, 10 லட்சம் ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டுஉள்ளதாக, அக்கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தை தாக்கிய 'பெஞ்சல்' புயலால், விழுப்புரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி உட்பட பல மாவட்டங்கள், பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன.
இப்பேரிடரில் இருந்து மக்களை மீட்க, தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் வகையில், வி.சி.க., சார்பில், முதல்வர் பொது நிவாரண நிதிக்கு, 10 லட்சம் ரூபாய் வழங்க, கட்சி உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எம்.எல்.ஏ.,க்களின் ஒரு மாத சம்பளத்தையும், எம்.பி.,க்களின் இரண்டு மாத சம்பளத்தையும் வைத்து, இந்நிதி முதல்வரிடம் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.