UPDATED : அக் 06, 2026 10:10 PM
ADDED : அக் 06, 2026 09:56 PM
ஆம்பூர்: ஆம்பூர் அருகே, 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, எஸ்.எஸ்.ஐ., ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர், ராமபுரத்தைச் சேர்ந்தவர்கள் மார்க்கபந்து, 45, மற்றும், மணிமேகலை, 40. இரு குடும்பத்தாருக்கும், பொதுவழி தொடர்பாக ஏற்பட்ட தகராறில், கைகலப்பு ஏற்பட்டது.
உமராபாத் போலீசில் இரு தரப்பிலும் அளித்த புகார்படி, போலீசார் விசாரித்து வந்தனர். மணிமேகலை தலைமறைவானதால், வீட்டிலிருந்த அவரது, பிளஸ் 2 படிக்கும், 17, வயது மாணவனை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். மாணவன் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க, எஸ்.எஸ்.ஐ., மதியழகன், மாணவனின் குடும்பத்தாரிடம், 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
திருப்பத்துார் போலீஸ் எஸ்.பி., அக்ஷய் அனில் வாக்ரேவிடம், மாணவன் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில், ‘அது உண்மை’ என தெரிந்ததையடுத்து, நேற்று மதியழகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
