ரூ.15 கோடி மோசடி; சிப்காட் வருவாய் அதிகாரி சென்னையில் கைது
ரூ.15 கோடி மோசடி; சிப்காட் வருவாய் அதிகாரி சென்னையில் கைது
ADDED : மார் 05, 2025 04:51 PM

சென்னை: ரூ. 15 கோடி மோசடி தொடர்பாக தமிழக தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் வருவாய் அலுவலர் சூரிய பிரகாஷை கரூர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சிப்காட் எனப்படும் தமிழக தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் வருவாய் அலுவலராக பணியாற்றி வருபவர் சூரிய பிரகாஷ். இவர் கடந்த 2016ம் ஆண்டு கரூர் மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்தார். அப்போது, தொழிலதிபர் நல்லுமுத்துவிடம் வெளிமாநிலங்களில் டெக்ஸ்டைல் தொடர்பான ஆர்டரை பெற்றுத் தருவதாக கூறி ரூ.15 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக 2024ம் ஆண்டு கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில், நேற்று சென்னையில் வைத்து அதிகாரி சூரிய பிரகாஷை கரூர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரை கரூருக்கு அழைத்து சென்று இந்த மோசடி தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.