திருச்சியில் ரூ.15.5 லட்சம் பணம், ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
திருச்சியில் ரூ.15.5 லட்சம் பணம், ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
UPDATED : ஜூலை 10, 2024 12:54 PM
ADDED : ஜூலை 10, 2024 12:07 PM

திருச்சி: திருச்சி ரயில் நிலையத்தில் ரூ.15.5 லட்சம் பணம் மற்றும் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கத்தை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். ஹவாலா பணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை மூத்த கோட்ட ஆணையர் அபிஷேக், உதவி கோட்ட ஆணையர் பிரமோத்நாயர், ஆய்வாளர் செபாஸ்டின் தலைமையிலான போலீசார் திருச்சி ரயில்வே சந்திப்பில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். சென்னையில் இருந்து திருச்சி வந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த மதுரையை சேர்ந்த லட்சுமணன் (26) என்பவரின் உடைமைகளை சோதனை செய்தனர்.
அவரிடம் இருந்து, ரூ.15.5 லட்சம் பணம் மற்றும் ரூ.2 கோடி மதிப்புள்ள 2 கிலோ 795.90 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. வணிக வரித்துறையினர் மூலம் பணம் மற்றும் தங்கத்தை கணக்கிடும் பணி நடந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால், ஹவாலா பணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.