உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : மார் 24, 2026 05:54 PM
அ நிறம் | அளவு
திருநெல்வேலி: திருநெல்வேலியில் பள்ளி தலைமை ஆசிரியரிடம் இருந்து ரூ. 2.09 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலி மானுார் அருகே சங்கரன்கோவில் நெடுஞ்சாலையில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக சென்ற கானார்பட்டியைச் சேர்ந்த அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர் சத்தியராஜின் காரை நிறுத்தினர். காரில் உரிய ஆவணங்களின்றி ரூ. 2.09 லட்சம் இருந்தது.
கானார்பட்டி சி.எஸ்.ஐ., சர்ச் ஆண்டு சங்கம் வசூல் செய்த தொகையை 'டயோசீஸ்' அலுவலகத்திற்கு கொண்டு செல்வதாக சத்தியராஜ் தெரிவித்தார். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததாக கூறி பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து மானுார் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
