ADDED : செப் 01, 2011 11:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த, நபார்டு நிதியுதவியுடன், 237 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது.
பல அரசு மேல்நிலைப்பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இன்னமும் இல்லை. வகுப்பறைகள், ஆய்வகம், சுற்றுச்சுவர் அமைத்தல், மாணவர்களுக்கான கழிவறை வசதி, தலைமை ஆசிரியர் அறைகளை அமைப்பதற்காக நபார்டு நிதியுதவி அளிக்கப்படுகிறது. மாநிலத்தில் 273 அரசு மேல்நிலைப்பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இப்பள்ளிகளில் 237 கோடியே 25 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் வசதிகள் செய்யப்பட உள்ளன.