sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பட்டுப்புழு வளர்ப்பு மனைகளுக்கு ரூ.29.46 கோடி நிதியுதவி

/

பட்டுப்புழு வளர்ப்பு மனைகளுக்கு ரூ.29.46 கோடி நிதியுதவி

பட்டுப்புழு வளர்ப்பு மனைகளுக்கு ரூ.29.46 கோடி நிதியுதவி

பட்டுப்புழு வளர்ப்பு மனைகளுக்கு ரூ.29.46 கோடி நிதியுதவி


ADDED : மார் 29, 2025 07:02 AM

Google News

ADDED : மார் 29, 2025 07:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை; ''தமிழகத்தில் பட்டுப்புழு வளர்ப்பு மனைகள் அமைக்க, 29.46 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்,'' என, அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார்.

சட்டசபையில், பட்டு வளர்ச்சித் துறையில் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

 தமிழகத்தில் 3,050 பட்டு விவசாயிகள் பயன் பெறும் வகையில், பட்டுப்புழு வளர்ப்பு மனைகள் அமைக்க, 29.46 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்

 அதிக மகசூல் தரும் மல்பெரி ரகங்கள் நடவு செய்ய, 3,050 பட்டு விவசாயிகளுக்கு, 6.82 கோடி ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்

 கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டங்களில், பட்டு வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள, விதைப் பண்ணைகள், பட்டுக் கூடு அங்காடிகள் ஆகியவற்றின் மேம்பாட்டு பணிகளுக்காக, 5.13 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்

 தொடர்ந்து, ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்டு வரும், 1,000 முன்னோடி பட்டு விவசாயிகளுக்கு, அத்தியாவசிய வசதிகள், 4.82 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தி தரப்படும்

 பட்டு விவசாயிகள் 3,050 பேருக்கு, நவீன தளவாடங்கள், 4.75 கோடி ரூபாய் செலவில் கொள்முதல் செய்து வழங்கப்படும்

 தேனி மாவட்டத்தில், ஒருங்கிணைந்த பட்டுக்கூடு அங்காடி வளாகம், 3.50 கோடி ரூபாய் மதிப்பில் நிறுவப்படும்

 பட்டு நுாற்பு தொழில் முனைவோரை ஊக்குவிக்க, 2.02 கோடி ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்

கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகம்

 கைவினைஞர்கள் தயாரிக்கும் பொருட்களை, மின் வணிகம் வாயிலாக உலக சந்தைக்கு எடுத்து செல்ல, 'கைவினைப் பொருட்கள் சந்தை இயக்கம்' 2 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும்

 தமிழக கைவினைப் பொருட்களை சந்தைப்படுத்த, 10 பெருநகரங்களில் 1.30 கோடி ரூபாய் செலவில் விற்பனை கண்காட்சிகள் நடத்தப்படும்

 பூம்புகார் மாவட்ட கைத்திறன் விருது பெறும் கைவினைஞர்களுக்கு, பரிசுத் தொகை, 10,000 ரூபாயில் இருந்து, 20,000 ரூபாயாக உயர்த்தப்படும், வெள்ளி பதக்கம், 5 கிராமில் இருந்து, 50 கிராமாக உயர்த்தப்படும்

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us